
ஆயிரம் முகம் அறிமுகம்அவை அத்தனையிலும்இல்லாத ஈர்ப்புஉன் முக தரிசனத்தில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன் பேச்சுஅவை எதிலும்இல்லாத இன்பம்உன்னோடு பேசுகையில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன்அருகினில் நின்றாலும்பாயாத மின்சாரம்உன் அருகினில் நிற்கையில்மட்டும் ஏன்? காதல் என்ற ஒன்றுதான்--அதுபுரியாத புதிருமல்ல எனக்குஅறியாத வயதுமில்லை உனக்கு ம் என்ற பெருமூச்சு வரும்கும் என்ற உருவம்தான் உனக்குசில்லென்ற காதல் வரும்வம்பான பருவம்தான் எனக்கு திட்டமிட்டு கண்களால்சுட்டு வீழ்த்தி விட்டாய்என் உள்ளமென்ற இல்லத்தில்உத்தரவின்றி உள்ளிட்டாய் என் சிந்தை என்ற மேடையில்காதல் சந்தம் பாடுகின்றாய்முத்தமிட்டு நீ சொன்னால்சத்தமின்றி உன் சித்தம் செய்யும்பித்தனாகி விடுவேன் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்அதில் முன்னதை விடுத்துபின்னதை நடத்து-- பொண்ணுக்குதங்க மனசென்று போடுகிறேன் நூற்றுக்கு நூறு விழுக்காடு என்றும் உன் என்பதுடன்என் பேரை இணைத்தால்அது ஆனந்தம்என்றும் உன் என்பதுடன்உன் பேரை இணைத்தால்அது பேரானந்தம்
No comments:
Post a Comment