- உன்னை நேசித்தபோதுதான்உலகம் அழகாக தெரிந்தது. உன்னை சுவாசித்தபோதுதான் வாழ்வின் அர்த்தம் புரிந்தது. ஒவ்வொரு கணமும் உனைப் பற்றி நினைத்தால் இதுதான் காதல் என்பதா? என் உயிர் நீயடா உள்ளம் சொல்லுது இதுதான் காதல் என்பதா? சொந்தங்கள் இருந்தும் தனிமையில் தவிக்கிறேன் இதுதான் காதல் என்பதா? மனதினில் உன்னுடன் சேர்ந்திட வாழ்கிறேன் இதுதான் காதல் என்பதா? நட்பு என்னும் மழையில் என்னை நனைய வைத்த நண்பனே நானறிந்த தமிழில் உன்னை கவிவரைந்தேன் கொஞ்சமே கற்புடைய அன்பில் என்னை கரையவைத்த அன்பே உனை கவிவரைய பழையபடி வரவேண்டும் கம்பனே ஊரறிந்த நாள்முதலாய் உறவுகொண்ட தோழனேநான் வேரறுந்து நின்ற வேளை விழுதான வீரனே அன்பு மொழி போசுவதில் நீ எனக்கு அண்ணனே அழித்திடா பாச வெள்ளம் அள்ளிதந்த வள்ளலே துன்பமான வாழ்க்கையை திருடிவிட்ட கள்வனேஉன் தூய்மையான தோழமை சொல்ல என் கவி ஏழையே உயிர் கொடுப்பான் தோழா என்றுரைப்பதெல்லாம் பழமையே என்னிடத்தில் இருப்பது உந்தன் உயிர்தானேஅதை கொடுத்துவிட்டு ஒருகணமெனும் உயிர் வாழ்வேனா சொல்லடா.......
Sunday, January 31, 2010
Monday, January 18, 2010
ஆனந்தம்-- பேரானந்தம்

ஆயிரம் முகம் அறிமுகம்அவை அத்தனையிலும்இல்லாத ஈர்ப்புஉன் முக தரிசனத்தில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன் பேச்சுஅவை எதிலும்இல்லாத இன்பம்உன்னோடு பேசுகையில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன்அருகினில் நின்றாலும்பாயாத மின்சாரம்உன் அருகினில் நிற்கையில்மட்டும் ஏன்? காதல் என்ற ஒன்றுதான்--அதுபுரியாத புதிருமல்ல எனக்குஅறியாத வயதுமில்லை உனக்கு ம் என்ற பெருமூச்சு வரும்கும் என்ற உருவம்தான் உனக்குசில்லென்ற காதல் வரும்வம்பான பருவம்தான் எனக்கு திட்டமிட்டு கண்களால்சுட்டு வீழ்த்தி விட்டாய்என் உள்ளமென்ற இல்லத்தில்உத்தரவின்றி உள்ளிட்டாய் என் சிந்தை என்ற மேடையில்காதல் சந்தம் பாடுகின்றாய்முத்தமிட்டு நீ சொன்னால்சத்தமின்றி உன் சித்தம் செய்யும்பித்தனாகி விடுவேன் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்அதில் முன்னதை விடுத்துபின்னதை நடத்து-- பொண்ணுக்குதங்க மனசென்று போடுகிறேன் நூற்றுக்கு நூறு விழுக்காடு என்றும் உன் என்பதுடன்என் பேரை இணைத்தால்அது ஆனந்தம்என்றும் உன் என்பதுடன்உன் பேரை இணைத்தால்அது பேரானந்தம்
Saturday, January 9, 2010
மரணமே என்னை விட்டுவிடு

என் தூக்கத்தை துரத்தியவளே... உன்னை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடு உன்னை நேசிக்க விடு உன்னோடு வெளியே போகும் வாய்ப்பு கொடு உன்னோடு பேச விடு நாம் சிரித்து மகிழ்ந்திட சிறிது நேரம் கொடு கைவிரல்களால் உன்னை வருட ஆணையிடு கன்னத்தில் முத்தமிட அனுமதி கொடு இதழோடு இதழ் இருக்க விடு உன் அழகை ஆள விடு உன்னில் தொலைந்த என்னை தேட விடு நீ என்னை விட்டு பிரிந்த தினத்தில் தூக்கிலிடு அவள் மடியின்மீது என்னை மாய்த்து விடு அதுவரை, மரணமே என்னை விட்டுவிடு
Monday, January 4, 2010
காதலைப்பற்றி சில...

காதலைப்பற்றி சில...
என் விழியிமையில் துளிர்விடும் மழை நீயடிஎன் நெஞ்சைப்பிளந்தால் மலர்களாய் கொட்டிடுவாய்உன் மெல்லிய இதழில் முத்தமாய் நானிருப்பேன் உன் வல்லிய பேச்சினில் சொற்களாய் உடனிருப்பேன்இசைபாடும் குயில்கூட கூவிட தயங்கும் உன் பேச்சில்மல்லிகைத்தோட்டம் வெட்கிகுனியும் உன்கூந்தல் மலர்களால்என் எழுதுகோலின் திரவியமாய் நீயிருக்க உன் வாய்மொழியின் தேனமுதாய் நானிருப்பேன் சாதிமதமொழிய வழிவகுக்கும் வசந்தமே காதல்புரிந்துணர்தலின் புலனாய்வு சாகித்யமே காதல்புவிஈர்ப்பு விசையினும் பலம்வாய்ந்தது காதல்தேக்கு மரத்தினும் தெம்பானது காதல்தேனின் சுவையினும் தெவிட்டாதது காதல்முக்கனியினும் முத்திரைபதிப்பது காதல்ஐம்புலத்தையும் அடக்கியாள்வதும் காதல்
பிரிவின் வேதனை
காதலே வேண்டாம் என்றுஎன் இதயத்தைப் பூட்டி வைத்ததேன்என்னை அறியாமலே என் மனதில்இடம் பிடித்த காதலியே..என்னுள் காதலெனும் செடியை நட்டாய் இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை விட்டுப்பிரிய நினைக்கும் உன்னைத் திட்டக் கூட மனமில்லாமல் தவிக்கிறேன்நான் வாடி மடிந்தாலும்...நீ வாழ்க என்று....!நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன்யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே...... நானில்லாமல் நீயிருப்பாய்......... ஆனால்..... நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்....!
புத்துயிர் கொடுப்பாயா....?
நான் நேசித்தவர்கள் என்னை நேசிக்காத போதும் நீ ஏங்கோ இருப்பினும் எனை நேசித்த உறவு நீயல்லவா
Sunday, January 3, 2010

அன்பே! அன்பே! என்உயிர் உள்ள வரை நான்உன்னைத் தேடிஉன்னைச் சரணடையகடலோரக் கவிதை போல் வாழ்வே மாயம் ஆனாலும்என்றும் அன்புடன்வானவில்லாய் வெள்ளித் திரை போல்என் மன வானில்தாஜ்மஹால் கட்டிபூ வேலியிட்டு பூந்தோட்டக்காவற்காரனாய் உனக்காக எல்லாம் உனக்காகஎன்று உன்னை நினைத்து….பல காதல் கோட்டை கட்டினேன்!என்னவளே! நீ என் முன் தோன்றும்ஒரு கணப் பொழுதுக்காய்!காலமெல்லாம் காத்திருப்பேன்!
உயிரானவளே...!

காதல் என்னும் கன்னி வலையில் காலம் காலமாய் கைது செய்யப் போபவளும் நீ தானா?நீ தான் ....எதிரி என வந்தவள் நீ காதல் என சொன்னவள் நீ உரிமையுடன் காத்தவள் நீ உணர்வுகளை புரிந்தவள் நீ புன்னகையால் கொன்றவள் நீ மனதுக்குள் வந்த புயல்களுக்கு மறுபெயரும் நீ நீ தான் ....யுத்தங்கள் இரத்தங்கள்நான் கண்டு வாழ ,முத்தங்கள் சொர்க்கங்கள் நீ தந்து ஆழ ,நொடிகள் நிமிடங்கள் உன் நினைவுடன் வாட ,கனவுகள் நினைவுகள் மகிழ்ச்சியை தந்தாட ,காலத்தின் கட்டளை - அது கரை காணவில்லை ,நேரத்தின் சூழ்ச்சி - அது முகம் காணவில்லை ,என்னவளே ஏதிர் காலத்தில் என்னுயிர் நீ இல்லையெனில் ஏதிர் காலமே எனக்கிங்கு இல்லையடி . . .

ஆயிரம் முகம் அறிமுகம்அவை அத்தனையிலும்இல்லாத ஈர்ப்புஉன் முக தரிசனத்தில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன் பேச்சுஅவை எதிலும்இல்லாத இன்பம்உன்னோடு பேசுகையில்மட்டும் ஏன்? எத்தனை பேருடன்அருகினில் நின்றாலும்பாயாத மின்சாரம்உன் அருகினில் நிற்கையில்மட்டும் ஏன்? காதல் என்ற ஒன்றுதான்--அதுபுரியாத புதிருமல்ல எனக்குஅறியாத வயதுமில்லை உனக்கு ம் என்ற பெருமூச்சு வரும்கும் என்ற உருவம்தான் உனக்குசில்லென்ற காதல் வரும்வம்பான பருவம்தான் எனக்கு திட்டமிட்டு கண்களால்சுட்டு வீழ்த்தி விட்டாய்என் உள்ளமென்ற இல்லத்தில்உத்தரவின்றி உள்ளிட்டாய் என் சிந்தை என்ற மேடையில்காதல் சந்தம் பாடுகின்றாய்முத்தமிட்டு நீ சொன்னால்சத்தமின்றி உன் சித்தம் செய்யும்பித்தனாகி விடுவேன் அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்அதில் முன்னதை விடுத்துபின்னதை நடத்து-- பொண்ணுக்குதங்க மனசென்று போடுகிறேன் நூற்றுக்கு நூறு விழுக்காடு என்றும் உன் என்பதுடன்என் பேரை இணைத்தால்அது ஆனந்தம்என்றும் உன் என்பதுடன்உன் பேரை இணைத்தால்அது பேரானந்தம்
காதலென்னும் எரிமலை
காதல் உருவாக்கப்படுவதில்லைஅதுஇரு உயிர்களால்மலர்ந்து விடுகிறதுகாதல் பிறப்பதில்லைஎந்தக் கருப்பையும்சுமப்பதில்லைபார்வையால் மட்டுமேதோன்றுவது மொழிகளற்ற காதல்காதல்உயிருள்ள ஒரு உடல்இன்னொரு உடலைதரிசிப்பதால் ஏற்படுகிறதுஅப்போ ஏற்படும்பார்வைப் பரிமாற்றத்தால்இதயங்கள் கனக்கும்இரு உயிர்களுக்குமேசுவாசத்தின் மூச்சோசுடு காற்றாகும்நிகழ்காலப் படுக்கையில்படுத்திருந்தேநேற்றைய நினைவிலும்நாளைய நினைவுகளிலும்வாசம்புரிய வல்லவர்களாகசிந்தனைச் சிறகுகள்விரிப்பார்கள்இருவர்தூக்கங்களுக்குள்ளும்வருடிச்செல்லும் கனவுகள்கௌரவிக்கப்படுகின்றன
Subscribe to:
Posts (Atom)