Thursday, December 24, 2009
கண்கள் கண்டதால் காதல் வந்தது பெண்ணே....!
உன்னையும் என்னையும்படைத்தவன் இறைவன்....அவனுக்கு எங்கேபோனது இதயம்....!உன்னையும் என்னையும்இணைப்பவன் எவனோ....அவனுக்கு கொடுப்பேன்என் இதயம்....!விழிகளால் கவிதைகள்கூறும் பெண்ணே....வியப்பிலே மயங்கிப்போனேன் கண்ணே....!வார்த்தைகள் ஒன்றும்வரவில்லைக் பெண்ணே....உன்னைப் பார்த்ததும்ஊமையாகிப் போனேன் கண்ணே....!உன் மனம் என்னோடு பேசுது பெண்ணே....உனக்குப் புரியவில்லையா என் காதல் கண்ணே....!உன் அழகைக் கண்டபின் தான் பெண்ணே....இந்த உலகம் அழகாய்த்தெரிகின்றது கண்ணே....!உன் சுவாசக்காற்றில்வாழ விரும்புகின்றேன் பெண்ணே....என்னை உன் உயிராய்ஏற்றுக் கொள்வாயா கண்ணே....!பாதையில் பார்த்த உறவுபாசமாய்ப் போகவேண்டும் பெண்ணே....பயணமாய்த் தொடரும் இரவுபந்தமாய்ப் போகவேண்டும் கண்ணே....!நீ... இல்லா நிணைவுஎனக்கு நரகம் பெண்ணே....நீ... இல்லா வாழ்க்கைஎனக்கு மரணம் கண்ணே....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment