Thursday, December 24, 2009

தாயும் நீயே சேயும் நீயே

எனக்கு தலைவலி என்றால்கூடதவித்து போகுதே உன் மனம்அப்போது நீ தாயாகிறாய்அடுத்தவள் அழகையோ திறமையையோ நான் புகழ்துவிட்டால்மூத்த பிள்ளையை கொஞ்சினால்இளய பிள்ளைக்கு வருவதுபோல்வறுகிறதே பொறாமை உனக்குஅப்போது நீ சேயாகிறாய் எனக்கு எனக்கென்றெ நீபார்த்து பார்த்து சமைத்து--அதைஆசை ஆசையாய் பரிமாறிநான் ருசித்து சாப்பிட நீரசித்து பார்ப்பாயேஅப்போது நீ தாயாகிறாய் அதையே என் அம்மா செய்துவிடில்தனக்கு தனக்கென்றெ சொந்தமானபொம்மையை அடுத்தவர் பறித்துவிடஏங்கிபோகும் குழந்தையைப்போல்உள்ளத்தால் ஏங்குகிறாயேஅப்போது நீ சேயாகிறாய் உழைக்க போகும் நான்வீடு திரும்ப தாமதமெனில்கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்கைபேசியில் அழைப்பதும்கவலையுடன் உன் கண்கள்வாசலை நோக்கிடுதேஅப்போது நீ தாயாகிறாய் உன்னை கடைகள் திரைஅரங்கு-என நான் அழைத்து செல்வதெனில்வெளியே செல்லும் பிள்ளையைப்போல்உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயேஅப்போது நீ சேயாகிறாய்

No comments:

Post a Comment